அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் மோகன்ராஜ்யை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி கடைவீதி , ஈசநத்தம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக பாடலாசிரியர் சினேகன் பொதுமக்களிடம் மக்கள் நீதி மையம் மாற்றத்திற்கான மையம் எனவே மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.

பின்னர் அரவக்குறிச்சி கடைவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் பேசியது:

நம்ம ஆளும் அரசு நிலத்திற்குக் கீழே மண், மணல், பொன் ஆகியவற்றை தோன்றி விற்பதைப் போல தற்போது ஹைட்ரோகார்பனையும் தொண்டி விற்று வருகிறார்கள்.

எதை விட்டுக் கொடுத்தாலும் நம் மண்ணை சுரண்டுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.
ஒவ்வொருவரும் அதை எதிர்த்து போராட முன் வர வேண்டும்.

அரவக்குறிச்சி பகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் விருந்து அளிப்பதாக கேள்விப்பட்டேன் அவற்றில் நீங்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பது என்னுடைய அறிவுரை காரணம் இது என் குடும்பம்.

அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை.

இன்று அன்னையர் தினம் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தமிழ்நாடும் நமக்கு ஒரு அன்னை தான்.அந்ததாய் தற்பொழுது உடல் நலமற்று கிடக்கிறதே என்பதை அனைவரும் உணர்ந்து அவசர உதவி மேற்கொள்ள வேண்டும்.

நிச்சயமாக அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்பட உள்ளது அந்த வாய்ப்பை நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவே நீங்கள் உங்கள் வெற்றி வேட்பாளர் மோகன்ராஜ் க்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நாங்கள் இந்த சின்னத்தை உங்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னாள் நீங்களே இந்த சின்னத்தை தத்து எடுத்துக் கொண்டீர்கள்.

தமிழகத்தின் ஒளிவிளக்காக மாறும் நாள் வெகுவிரைவில் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்களும் உணர்ந்தால் நிச்சயம் நாளை நமதே.

இவ்வாறு அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன்

20total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *