அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள்.

மக்களைபற்றி சிந்திப்பவன் தான் தலைவன் ஆட்சியை கலைப்பவன் தலைவன் அல்ல சுயநலவாதிகளுக்கு வாக்கு அளிக்க கூடாது பிரச்சார களத்தில் வாக்களார்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிய சில தினங்களே உள்ள நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு அரசியில் கட்சியின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என அரவக்குறிச்சி தொகுதிக்கு வந்து தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அரவக்குறிச்சி தொகுதி எப்போதும் பரபரப்பு உள்ள தொகுதியாக உள்ளது.

இன்று அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவு திரட்ட திறந்த வேனில் தொகுதிக்குட்பட்ட நொய்யல்குறுக்கு சாலை,குப்பம்,க.பரமத்தி,ஆரியூர் ,தென்னிலை மற்றும் தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேசிய சரத்குமார் விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்நாதனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய அவர் இப்பகுதியில் விவசாயம் செழிக்க 700-கோடியில் காவிரியின் குறுக்கே தடுப்பணையும், காவிரி கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எதிர்கட்சி வேட்பாளரை பற்றி கூற வேண்டும் என்றால், யாரெல்லாம் புரட்சி தலைவியை எதிர்த்தார்களோ அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

யார் இந்த தேர்தலை நடத்த கூடாது என சொன்னார்களோ, அவர்களுடன் இணைந்து பேசுகிறார்.

பல ஆண்டுகளாக அவரை நான் பார்த்து வருகிறேன் சுயநலம் உள்ள வேட்பாளர் என்றால் அவர்தான் என்றார்.

யார் ஒருவர் மக்களுக்காக திட்டங்களை தீட்டி மக்களுக்காக சிந்திக்கிறார்களோ அவர் தான் தலைவராக இருக்க முடியும் முதலமைச்சர் பதவி மட்டும் தான் அரசியலுக்கு தேவை என செயல்படுபவர் தான் ஸ்டாலின்.

5-ஆண்டு காலம் அட்சி நடப்ப்பதற்க்காகதான் நீங்கள் வாக்களிக்கிறீர்கள்.

5-ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி நடந்தால் தான் கடந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் நடந்த குறைகளை களைந்து சிறப்பாக பணியாற்ற முடியும்.

மே 23-ம் தேதிக்கு பிறகு தான் தான் முதலமைச்சர் என்கிறார்.

அது ஒரு கனவு உறுதிபட சொல்கிறேன் அவரை ஏளனபடுத்த வேண்டும் என கூறவில்லை.

மக்களை பற்றி சிந்திப்பவன் தலைவன் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பவர் தலைவனாக முடியாது.

இது ஜனநாயக நாடு மக்கள் வரிப்பணத்தை தேர்தலுக்காக செலவழித்து கொண்டே இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாக்களிக்க கேட்டு கொண்டார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன்

1total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *