கரூர் -கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கை புதூரில் கபடி வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் மக்களே இலவச கபடி பயிற்சி அளித்து வருகின்றனர்.

கரூர் -கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கை புதூரில் கபடி வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் மக்களே இலவச கபடி பயிற்சி அளித்து வருகின்றனர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கை புதூர் பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர் காவலர்களாகவும், இராணுவத்தினராகவும் அரசு பணியில் உள்ளனர் இவர்கள் அனைவரும் விளையாட்டு கோட்டாவில் பணியில் சேர்ந்துள்ளனர் . அது மட்டும் இன்றி இந்த பகுதியில் உள்ள மக்களும் விளையாட்டின் மீது குறிப்பாக கபடியின் மீது ஈர்ப்பு உள்ளவர்களாக திகழ்கின்றனர். தன்னால் சாதிக்க முடியவில்லை என்றாலும் இந்த பகுதியில் உள்ள இளம் பருவத்தினருக்கு பயிற்சியளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் விதமாக வேலவன் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 2016-ல் இருந்து கபடி பயிற்சியளிக்கின்றனர். முன்னால் ராணுவ வீரர் திருமுருகன் மற்றும் காவலர் ஆனந்த் என அரசு பணியில் உள்ள வாகள் அனைவருக்கும் பயிற்சியளிக்கிறார்கள் 2016-ல் 10 நபர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்பட்டது ஆனால் தற்போது 50 க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.கரூர் மற்றும் அல்லாமல் திருச்சி, கோவை என பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு பயிற்சி பெறுகின்றனர். 8 வயது முதல் உள்ள ஆண், பெண் என இருவருக்கும் பயிற்சியளிக்கப் படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சிக்கு தேவையான உடைகளை வழங்கியும், ஊட்டச்சத்து பொருட்களை ஒவ்வொரு நாளும் அப்பகுதி மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான இடவசதி இல்லாமல் அவதிபடுவதாகவும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன் .

3total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *