சீமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் கடைவீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விவசாய சின்னத்துக்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் கடைவீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விவசாய சின்னத்துக்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளருக்கு எனக்காக வாக்களிக்க வேண்டாம் ,நமக்காக வாக்களியுங்கள்.

அதே போல உங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் உங்களுக்கு பின்னால் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்காக வாக்களியுங்கள்.

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற மண்ணின் வளங்களை எடுப்பது உடலிலுள்ள பாகங்களை தனித்தனியே எடுப்பதற்கு சமம் கிட்டத்தட்ட ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருப்பினும் ஒரு ஐந்து ஆண்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளியுங்கள் சிறந்த தேசமாக மாற்றுவதற்கு கனவு காண்கிற பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம் .

கோடி கனவுகளைக் என்று கூறவும் அதை கூடி நிறைவேற்றுவதற்கு நீங்கள் அனைவரும் வாருங்கள் என கைகூப்பி களத்தில் நிற்கிறோம்.

உங்களுக்கு ஓட்டுக்கு காசு அளிக்க எங்களால் முடியாது ஆனால் உயர்ந்த வாக்கினை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் காசாலர்கள் இல்லை, ஆகச்சிறந்த கருத்தாளர்கள்.

நாங்கள் கோடிகளை கொட்டி இந்த தேர்தலில் நிற்கவில்லை உயர்ந்த கொள்கைகளை நிறுத்தி தேர்தலில் நிற்கிறோம்.

நாங்கள் கேட்பது ஓட்டல்ல மக்களின் உரிமை.

நாங்கள் வாக்கு கேட்கவில்லை எதிர்கால மக்களின் வாழ்க்கையை கேட்கிறோம் .

அதை தருவதும் தராததும் உங்கள் விருப்பம்.

நான் தோல்வி அடைந்தால் அது என்னுடைய தோல்வியல்ல மக்களின் தோல்வி.

அதுபோல என் வெற்றி என்பது என் வெற்றியல்ல என் மக்களின் வெற்றி இதனை புரிந்து கொண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற வாக்காளர்கள் விவசாயி சின்னத்தில் வாக்களித்து செல்வம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன் .

3total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *