Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
செந்தில்பாலாஜியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கரூர் பரப்புரையில் ஈடுபட்டார்: - vigilance TV

செந்தில்பாலாஜியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கரூர் பரப்புரையில் ஈடுபட்டார்:

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கரூர் வேலாயுதம்பாளையம் கடைவீதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்:

அப்பொழுது பொதுமக்களுடைய பேசிய ஈஸ்வரன்:

தமிழகத்திலேயே யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அரவக்குறிச்சியில் இருக்கிற அத்தனை வாக்காளர்களுக்கும் கிடைத்திருக்கிறது வரும் 19ஆம் தேதி நீங்கள் உங்கள் விரலில் வைக்கிறது என்பதே நம்முடைய செந்தில்பாலாஜியை சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவதற்கு மட்டுமல்ல நீங்கள் செலுத்துகிற ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தினுடைய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கக்கூடிய ஓட்டி என்பதை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் இன்றைக்கு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்ற ஒன்று இல்லை என்று சொன்னால் விவசாயத்தை செய்ய முடியுமா அதற்கான வாய்ப்பு இருக்கிறதா.

இந்தியாவில் எங்கேயும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க போது முதல் முறையாக தமிழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இலவச மின்சாரத்தை வழங்கினார் அதை யாரும் மறந்துவிட முடியாது.

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் டெல்லியின் வீதியில் போராட்டம் நடத்திய விவசாயி.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட அரசுகள் வாங்கிய கடன் 50 லட்சம் கோடி.
ஆனால் பிஜேபி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய கடன் மட்டும் சுமார் 90 லட்சம் கோடியாகும்.

நினைத்துப் பாருங்கள் அப்படிப்பட்ட பிஜேபியோடு அதிமுக அரசு கூட்டு வைத்துள்ளது அவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா என கேள்வி எழுப்பினார்
ஈஸ்வரன் .

நம்மையெல்லாம் முன்னேற்றக் கூடிய ஒரே ஒரு சின்னம் உதயசூரியன் சின்னம் தான் என்பதைப் புரிந்துகொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழக முதல்வராக பொறுப்பேற்க செய்ய தவறாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன் .

21total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *