தமிழக முதல்வராக ஸ்டாலின் பொருப்பேற்பார் என்று கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி எடப்பாடி ஆட்சி கிடையாது டெட்பாடி ஆட்சி என்றும் வரும் கருணாநிதி பிறந்த நாளில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொருப்பேற்பார் என்று கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பொது மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும்போது, கடந்த 15ம் தேதி பாராளுமன்ற தேர்தில் மோடியை எவ்வாறு வீட்டிறகு அனுப்பினிர்களோ அதேபோல் வரும் 19 தேதி எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுபுங்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தது நீங்கள் ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் குறுக்கு வழியில் முதல்வர் பதவியை பெற்றார் எடப்பாடி பழனிசாமி.
தற்போது நடைபெற்று கொண்டிருப்பது எடப்படாடி ஆட்சி கிடையாது, இது ஒரு டெட்பாடி ஆச்சி, நான்கு தொகுதிகள் அதாவது நான்கு ஆணிகள் உங்கள் கையில் உள்ளது.
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் செந்தில்பாலாஜிதான் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வரும் ஜூன் மூன்றாம் தேதி தி.மு.க., கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொருப்பேற்பார் என்று பேசினார்.
இந்த பிரச்சார நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் பொருப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட பல்வேறு கூட்ட கட்சியினர் கலந்து கொண்டர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி கலந்து கொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன்

2total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *