அதிகாலை வேளையில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற காவலர் எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோதி சம்பவ இடத்தில் பலி.

அதிகாலை வேளையில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற காவலர் எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோதி சம்பவ இடத்தில் பலி.

கரூர் மாவட்டம் தொழில் பேட்டை அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் மோகன் ராஜ் வயது 27.

தமிழ்நாடு தமிழ்நாடு காவல்துறையில் கோவையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு கரூரில் இருந்து நெரூர் வழியாக தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோதி விபத்தில் சம்பவ இடத்தில் மோகன்ராஜ் தலையில் அடிபட்டு பலியானார்.

சம்பவம் அறிந்த வாங்கல் காவல்துறையினர் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து நமது செய்தியாளர் வீ.பிரபாகரன்

182total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *