அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள் யாரும் விளங்கியதாக வரலாறு கிடையாது. அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.

அரசியல் வாழ்க்கையை முடித்து கொள்ளத்தான் மீண்டும் அரவக்குறிச்சி தேர்தலில் நிற்கிறார் செந்தில்பாலாஜி-தம்பிதுரை

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்ட நிலையை எட்டியது இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை 5 மணி அளவில் அரவக்குறிச்சி அருகே உள்ள ஏவிஎம் கார்னரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் வளர்மதி முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்துப் பேசிய தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பதவிக்காக ஒருவரால் திணிக்கப்பட்ட தேர்தல் இது.மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு சென்று விட்டு இதே தொகுதியில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்து தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியாற்றி வெற்றி வாய்ப்பை வழங்கியது.பதவி வெறி காரணமாக இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டு பல கட்சிக்கு சென்று வந்தவர் தான் செந்தில் பாலாஜி.இதுவரை ஐந்து கட்சிகளுக்கு மாறி வந்திருக்கிறார்.இந்த தேர்தலில் இவருக்கு தோல்வியை பரிசாகக் கொடுத்தால் அடுத்த கட்சி எதுவென தெரியும்.நான்கரை ஆண்டு காலம் அமைச்சராக இருந்து விட்டு தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறேன் என்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்குகிறே என தெரிவித்தார். திட்டங்கள் எல்லாம் அரசால்தான் முடியும்.ஆனால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு என்ன செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.எப்போது தேர்தல் வந்தாலும் திமுக பொய்யான தேர்தல் அறிக்கைஐ வாக்குறுதியாக அளிக்கும்.படித்த பெண்களுக்கு எட்டு கிராம் தாலிக்கு தங்கம் முதியோர் உதவித்தொகை கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அம்மாவின் பெயரால் நடைபெறும் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று எண்ணி 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்ததை பொறுக்க முடியாமல் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெற்றனர்.யாரோ ஜோசியர் கூறியதைக் கேட்டு கலர் கலராக டீ சர்ட்டும் கடைகளில் சென்று டீ குடித்து தமிழக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று திட்டமிடும் ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது.அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப் பட்ட இந்த மாவட்டத்தினுடைய துரோகி அமைச்சராக வேண்டும் என்று திமுகவுக்கு சென்றிருக்கிறார். அம்மாவுக்கு துரோகம் செய்த யாரும் விளங்கியதாக வரலாறு கிடையாது.இதே செந்தில் நாதன் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் நின்றபோது அவர் தோற்கவில்லை இந்தக் கயவர்களால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் ஆண்டவருடைய தீர்ப்பு எவ்வாறு இருக்கிறது பார்த்தீர்களா இதே செந்தில்நாதன் செந்தில் பாலாஜிஐ தோற்கடிக்கும் நிலை இப்போது உருவாகி இருக்கிறது.எந்த திட்டமாக இருந்தாலும் அது ஆளும் கட்சியால் தான் செயல்படுத்த முடியும்.தமிழகத்தில் 18 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. துணை முதலமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஸ்டாலினால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது.ஜி.எஸ்.டி, நீட் தேர்வு கச்சதீவை தாரை வார்த்தது இலங்கையில் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்தது திமுக தான்.நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். அதேபோல் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்.வரும் 24 ஆம் தேதி அரவக்குறிச்சி அதிரும் வகையில் வெற்றி விழா கொண்டாடப் போகிறோம்.இந்த தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்துக்கும் நடைபெறக்கூடிய தேர்தல்.எனவே மன சாட்சியுடன் நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து செந்தில்நாதனை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் 5வருடத்திற்குள்ளாகவே 3-முறை தேர்தல் வந்ததின் காரணமே செந்தில்பாலாஜி தான்.அரசியல் வாழ்க்கையை முடித்து கொள்ளத்தான் மீண்டும் அரவக்குறிச்சி தேர்தலில் நிற்கிறார் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி வெற்றி பெற முடியாது என்றும் அதிமுக கொடுக்கின்ற கட்சி என்றும் திமுக கெடுக்கின்ற கட்சி என்றும் கொடுக்கிற கட்சிக்கு வாக்கு செலுத்துவதா? கெடுக்கிற கட்சிக்கு வாக்குகளை செலுத்துவதா? என மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து வேட்பாளர் வி.வி.செந்தில் நாதன் பேசும் போது அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்து வந்த செந்தில்பாலாஜி இன்று கட்சிமாறி சென்ற அவருக்கு அதிமுக தொண்டர்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.நான்கரை ஆண்டுகளாக மந்திரியாக இருந்தவர் இந்த அரவக்குறிச்சி மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுக்கவில்லை.தொகுதிபக்கமே எட்டி பார்க்காத சட்டமன்ற உறுப்பினர் தமிழகத்திலே நீயாக மட்டும் தான் இருக்க முடியும் என்ற அவர் துரோகிகளை வெல்ல அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து நமது செய்தியாளர் வீ.பிரபாகரன்.

53total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *