அரவக்குறிச்சி இறுதிகட்ட பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிமொழி.

தேர்தல் காலத்தில் திமுக அளிக்கும் வாக்குறுதிகளை திமுக எப்போதுமே சொன்னதைச் செய்யும் செய்வதை சொல்லும்.அரவக்குறிச்சி இறுதிகட்ட பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிமொழி.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சார இறுதிநாளில் திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது முறையாக தனது பிரச்சாரத்தை திறந்த வேனில் சென்றவாறு இன்று துவக்கினார். வேட்பாளர் செந்தில்பாலாஜி உடனிருந்தார். இன்று தொகுதிக்குட்பட்ட தடாகோவில், வாவிகினம், வேலஞ்செட்டியயார், சின்னதாராபுரம், தென்னிலை கடைவீதி உள்ளிட்ட 12-இடங்களில் மாலை 6-மணி வரை பிராச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். வாவிகினம் பகுதியில் அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடையே பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால் 118 இடங்களைப் பெற்று இருக்க வேண்டும்.ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் 97 இடங்களை பெற்றுள்ளோம். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற இடைத்தேர்தல் 22 இடங்களிலும் திமுக தான் வெற்றி பெறும் ஆக மொத்தம் 119 இடங்களை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏற்கனவே உள்ள சட்டமன்ற நடைமுறைகளின்படி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தை தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் ஆளும் கட்சியினர் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுக்கலாம்.அதனால் வரும் 23ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் மோடி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. மோடியின் தயவால்தான் இவ்வளவு காலம் நீங்கள் ஓட்டி கொண்டிருக்கிறீர்கள்.ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க இருக்கிறார் இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதி மக்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறீர்கள்.அதற்கு திமுகவின் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.வாவிகணம் பகுதியில் 20 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் தனி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும், அரசு கலைக் கல்லூரி அமைக்கவும், இப்பகுதியில் அதிகம் விளையக்கூடிய முருங்கை உள்ளிட்ட விவசாய பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதனக் கிடங்கு, ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு தடுப்பணைகள் அமைத்து நீர் மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

குடகனாறு நங்காஞ்சி ஆறு களில் உள்ள முட்புதர்களை அகற்றி நோய்மை ஆறுகளாக மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றத்துக்காக மூலகாரணமாக இருக்கக் கூடிய செம்மறி ஆடு வளர்ப்பு கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி பணிகள் வழங்கப்படும்.வாரம் ஒரு முறை 100 நாள் வேலை திட்டத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஊதியம் பெறுகின்ற வசதியை ஏற்படுத்தி தர போகிறோம்.வேட்பாளர் செந்தில் பாலாஜி பகுதியில் உள்ள வீடு இல்லாத 25 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.இத்திட்டம் அரவக்குறிச்சி க்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நிறைவேற்றும் பொருட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்.ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்.அதில் குறிப்பாக கிராமப்புற மகளிருக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன், 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப் பணியாளர் பணி, பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் பணி, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தப்படும், 300 ரூபாய் இருக்கும் கேபிள் கட்டணம் 100 ரூபாயாக குறைக்கப்படும், ஏழை எளிய விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி என பல்வேறு திட்டங்கள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தேர்தல் காலத்தில் திமுக அளிக்கும் வாக்குறுதிகளை திமுக எப்போதுமே சொன்னதைச் செய்யும் செய்வதை சொல்லும்.எனவே திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து நமது செய்தியாளர் வீ.பிரபாகரன்.

39total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *