மணல் கொள்ளையை தடுக்க சென்றவர்களை மண்வெட்டியால் வெட்டு விட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மணல் கொள்ளையை தடுக்க சென்றவர்களை மண்வெட்டியால் வெட்டு விட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சார்ந்தவர் சங்கர் இவர் சான்றோர் குப்பம் பகுதியில் லீக்மிசந்த் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை பாதுகாத்து பராமரித்து வருகிறார்.
இன்று காலை சங்கருக்கு வந்த அலைபேசி அழைப்பில் விவசாய நிலத்தில் மணல் திருடப்பட்டு வருவதாகவும் 25க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் செல்கிறார்கள் எனவும் இதை நீங்கள் தடுக்காவிட்டால் நாங்களும் மணலை எடுத்துக் கொள்கிறோம் என்று சான்றோர் குப்பம் பகுதியில் சார்ந்த செந்தில் அவருக்கு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சங்கர் தான் பராமரித்து வரும் விவசாய நிலத்தில் சென்று பார்த்த போது அங்கு மாட்டுவண்டிகள் ஏதும் இல்லாத நிலையில் ன நிலத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சான்றோர் குப்பம் பகுதியைச் சார்ந்த மணல் கொள்ளையர்கள் செந்தில் மற்றும் சாமு ஆகியோர் உள்ளிட்ட 5 பேர் அவரை கொலை முயற்சியுடன் மண்வெட்டியால் தாக்கியுள்ளனர்.
இதில் சங்கர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தடுத்த போது கை உள்ளிட்ட இடங்களில் சங்கருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது பயந்து போன சங்கர் தப்பி ஓடி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து சங்கர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல்துறையினர் செந்தில் மற்றும் சாமு உள்ளிட்ட 5 பேரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஆம்பூர் பாலாற்றில் மின்னூர், தேவலாபுரம், ஆலங்குப்பம், பச்ச குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வந்தது பாலாற்றில் மணல் தட்டுப்பாடு ஏற்படவே அருகிலுள்ள பாலாற்றங்கரையின் அருகிலுள்ள விவசாய நிலங்களை குறிவைத்து மணல் கொள்ளையர்கள் தற்போது மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்காக பாலாற்றங்கரையில் உள்ள விவசாயிகளிடம் விலை பேசும் மணல் கொள்ளையர்கள் அவர்கள் ஒத்து வராத நிலையில் அவர்களை அடித்து துன்புறுத்துவது கொலை மிரட்டல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் .
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதி நடைபெறுவதாக வெளிவந்த செய்திகளை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் கூடுதலாக மணல் கொள்ளையை தடுக்க புதிய குழுவை ஒன்றை உருவாக்கி நிலையில் அடுத்த தினமே இந்த மணல் கொள்ளையும் அதனைத்தொடர்ந்து தடுக்க சென்றவர்கள் தாக்கப்படும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இதனால் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடுக்க முடியுமா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

Vigilance தொலைக்காட்சிக்காக கள்ளக்குறிச்சியில் இருந்து நமது செய்தியாளர் கோவிந்தன்.

373total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *