கஞ்சா விற்பனையாளர் சூரியகாந்த் கைது.

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக கம்பத்தைச் சேர்ந்த சூர்யகாந்த் (28) என்பவர் மீது பிடிகட்டளை (Warrent) நிலுவையில் உள்ள நிலையில் காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.சவடமுத்து அவர்களின் தலைமையில் SSI திரு.கர்ணன், SSI திரு.விஜயகுமார், PC திரு.தங்கதுரை ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் சூரியகாந்தை பிடித்து சார்பு ஆய்வாளர் சவடமுத்து அவர்களால் பிரிவு 229 (A) IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் 10 திருட்டு வழக்குகளும், ஒரு கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கும், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு உள்ளது.
மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நமது சிறப்பு ஆசிரியர் சையது இப்ராஹிம்.


590total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *