துரிதமாக செயல்பட்டு15 நிமிடத்தில் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு.

துரிதமாக செயல்பட்டு15 நிமிடத்தில் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு
சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் நிலையம் முன்பு 03/06/2019 ஆம் தேதி அழுது கொண்டு ஓடிய விஜயராகவன் (8) என்ற சிறுவனை பார்த்த பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வரவேற்பு பணி புரியும் பெண் காவலர் திருமதி.#அன்னக்கொடி சிறுவனை நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அச்சிறுவன் கேரள மாநிலத்தை சேர்ந்தவன், அம்மா பெயர் லட்சுமி, அக்கா கவிதா, தம்பி ஹரிகிருஷ்னன் மற்றும் உறவினர் உடன் வந்ததாக கூறியதின் பேரில் SSI. திரு.#செல்வராஜ்,SSI திரு.#கோவிந்தராஜன்,SSI. திரு.#சுப்பிரமணி மற்றும் தலைமை காவலர் திரு.#சரவணன் ஆகியோர்கள் பொது மக்கள் நெரிசல் மிகுந்த சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 15 நிமிடத்தில் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.குழந்தையை பெற்றுக்கொண்ட பெற்றோர் பள்ளப்பட்டி போலீசாருக்கு கண்ணீமல்க நன்றி கூறினர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக சேலத்தில் இருந்து நமது செய்தியாளர் சேலம் சங்கர்.

72total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *