மூன்றாவது கண்(CCTV) உதவியால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்.

மூன்றாவது கண்(CCTV) உதவியால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்.

சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, பட்டை கோயில் அருகில் சென்னையைச் சேர்ந்த செங்குட்டுவேல் (72) என்ற முதியவர், உறவினரின் திருமணத்திற்கு நடந்து செல்லும் பொழுது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் முதியவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று செல்போன் மற்றும் Rs.12,000/-பணத்தையும் பறித்துக்கொண்டதாக 29,/05/2019 ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அம்மாபேட்டை காவல் நிலைய SI. திரு. #சதீஷ்குமார் அவர்கள் வழக்குப்பதிவு செய்தார். உடனடியாக வடக்கு சரக சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் திரு. #Sஆனந்த்குமார் அவர்களின் தலைமையில் SSI. திரு. #ரங்கராஜன், SSI. திரு.#சங்கர்,SSI. திரு #வசந்தகுமார்,HC. திரு. #காதர், Gr.I. திரு. #செந்தில் ஆகியோர்கள்அடங்கிய தனிப்படையினர், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது(1) சேலம் நஞ்சம் பட்டியை சேர்ந்த கனகராஜ், (2) நீர்முள்ளிகுட்டையை சேர்ந்த செல்வராஜ் என தெரிய வந்தது.4/06/2019 ஆம் தேதி குற்றவாளிகளை கைது செய்து விசாரித்ததில் வழிவழி பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது.இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ரூ 10 ஆயிரத்தை மீட்ட போலீஸார் மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக சேலத்தில் இருந்து நமது செய்தியாளர் அரிமா பாபு

91total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *