உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது திமுக தான் ஜெயிக்கும் அப்போது உங்கள் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின் .

உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது திமுக தான் ஜெயிக்கும் அப்போது உங்கள் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை இந்த தொகுதி எம்பியும் எம்எல்ஏவும் உடனடியாக நிறைவேற்றுவார்கள் தவிட்டுபாளையம் பகுதி பொது மக்களிடம் உறுதி.

அரவக்குறிச்சி தொகுதி தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த தேர்தலின்போது மே மாதம் 8 ஆம் தேதி நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதை அடுத்து தவிட்டுப்பாளையம் பகுதிக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறு பெஞ்சில் அமர்ந்து ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் ஸ்டாலினிடம் பல கோரிக்கைகளை வைத்தனர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதால் வார்டு கவுன்சிலர்கள் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளை குறித்து கேட்டு பெற முடியவில்லை என்று பொதுமக்கள் ஸ்டாலினிடம் குற்றஞ்சாட்டினார்.உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது திமுக தான் ஜெயிக்கும் அப்போது உங்கள் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின்.கட்டிபாளையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து தவிட்டுப்பாளையம் வருவதற்குள் தினம் தினம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கையில் பிடித்துக் கொண்டு வரவேண்டியுள்ளது. தினமும் விபத்தில் நடந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.எனவே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் பெண்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர் புகழுரில் காவிரி கதவனை கட்ட இருப்பதால் கரையோரம் குடியிக்கும் எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் உள் புகாமல் இருக்க ஆற்றில் தடுப்பணை கட்டி தரவேண்டும் என்றும், எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும். குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டுமென்றும் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர் தேசிய நெடுஞ்சாலையில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் இரவில் நடந்து வருவதற்கு பயமாக இருக்கிறது என்று பெண்கள் கூறினார்கள்அதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.திமுக கூட்டணியில் எம்பியும் எம்எல்ஏவும் இந்த தொகுதியில் இருக்கிறார்கள் அவர்கள் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்று கூறினார் ஸ்டாலின் அப்போது கரூர் எம்பி ஜோதிமணி அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் முத்துசாமி மாநில நெசவாளர் அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

27total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *