கரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி டீனை கண்டித்து 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்.

கரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி டீனை கண்டித்து 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அச்சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் போராட்டத்தை கைவிடச் சொன்னதால் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுவை வழங்குவதாக குற்றம் சாட்டிய அவர்கள் கடந்த 5ம் தேதியன்றி பணிகளை புறக்கணித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வென்னிலாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் கார்த்தி, செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி, மாநில தலைவர் நல்லம்மாள் ஆகியோரை ஒழுங்கீனமாக செயல்பட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கடந்த 10ம் தேதி மதியம் 2 மணி முதல் பணியிடை நீக்கம் உத்தரவை திரும்ப பெற வேண்டும், செவிலியர்களுக்கு எதிராக செயல்படும் முதல்வரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவற்றை காத்திருப்பு போராட்டமாக மாற்றி மருத்துவமனை வளாகத்தினுள்ளே இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி, தலைவர் சக்திவேல் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கல்லூரி முதல்வரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை தற்போது முடித்துக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என மாநில் பொதுச் செயலாளர் தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநில பொறுபாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதை அடுத்து செவிலியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

16total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *