கரூரில் 7வது படிக்கும் மாணவி ரக்‌ஷனா புவி வெப்பமயமாதலை தடுக்க 4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தூவுவதற்கான பிரச்சார பயணத்தை துவக்கினார்.

கரூரில் 7வது படிக்கும் மாணவி ரக்‌ஷனா புவி வெப்பமயமாதலை தடுக்க 4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தூவுவதற்கான பிரச்சார பயணத்தை துவக்கினார்.
கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தை அடுத்த ராமேஸ்வரபட்டியை சேர்ந்த ரவீந்தரன் சங்கீதா தம்பதியரின் மகளான ரக்‌ஷனா கரூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் சிறுவயதில் இருந்தே முட்டை மேல் நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, 80 ஆயிரம் மரகன்றுகளை தானே வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்தது,10 மொழிகளில் மரம் பற்றி விழிப்புணர்வு பேச்சு பேசி இந்தியசாதனை புரிந்தது உள்ளிட்ட பல்வேறு சாதனை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.இதனையடுத்து இன்று புவி வெப்பமயமாதலால் எதிர் வரும் உலக அழிவை தடுக்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று மீண்டும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 8ஆயிரம் கிமீ லாரி மூலமாக சென்று 4 லட்சம் விதை பந்துகளை ஒரு கிமீட்டருக்கு 50 விதை பந்துகள் வீதம் 8 ஆயிரம் கிமீ தூரம் வரை நிகழ்ச்சி இன்று துவங்கியது.போகும் பகுதிகளில் எல்லாம் புவி வெப்பமயமாதல்,பெண் கல்வியை ஊக்குவித்தல் பறவை இனம் காத்தல்,குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் உள்ளிட்ட ஆறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன் .

31total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *