முதலைப்பட்டி குளம் ஆக்கிரப்பு.அதே ஊரைச்சேர்ந்தவர்கள் வெட்டிபடுகொலை.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி குளம் ஆக்கிரப்பு அகற்றகோரி சமுக ஆர்வலர்கள் வீரமலை மற்றும் இவருடைய மகன் நல்லதம்பியை கடந்த 29 தேதி அதே ஊரைச்சேர்ந்தவர்கள் வெட்டிபடுகொலை செய்தனர்.இதில் ஆறு நபர்கள் கடந்த 31 தேதி மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். குளித்தலை போலிசார் கடந்த 8 ஆம் தேதி ஆறு நபர்களையும் குளித்தலை நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியராஜ் முன் ஆஜர் செய்து மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிபெற்றனர். இன்று ஆறு நபர்களையும் ஆஜர் செய்து மேலும் ஒரு நாள் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி அனுமதி. இந்த படுகொலையில் மேலும் ஒருவர் கைது படுகொலையில் ஈடுப்பபட்டவர்கள் திருச்சி ராம்ஜிநகர் கொத்தமங்கலம் வினோத் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மறைத்து வைத்திருந்ததால் குளித்தலை போலிசார் வினோத்தை கைது செய்து வினோத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

87total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *