Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
சினிமா Archives - vigilance TV

கரூர் குளித்தலையில் இளையதளபதி விஜய் அவர்களின் 45 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

கரூர் குளித்தலையில் இளையதளபதி விஜய் அவர்களின் 45 வது பிறந்தநாள் கொண்டாட்டம் திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய

Read more

கரூரில் பாண்டவர் அணி தலைவர் நாசர் பேட்டி.

நடிகர் சங்கத்தை பொறுப்பேற்ற போது 85-லட்சம் தான் இருப்பு இருந்தது. தற்போது 1-கோடியே 75-லட்சம் அளவிற்கு நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.கரூரில் பாண்டவர் அணி தலைவர்

Read more

“நட்பே துணை ” வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம்..வடுகம்.R. சிவகுமார் IPS அவர்களின் பாடல் வரிகள் “ஒளி தரும் சூரியன் உறங்கச் சென்றால் உயிரினம் வாழ்வதில்லை.. வலிகளைத் தாங்கும் பயிற்சியின்றி வாழ்க்கையில் வெற்றி இல்லை”

“நட்பே துணை ” வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் அதில் ஒரு குறிக்கோள், கொள்கை, மண்வாசம்,

Read more

“நட்பே துணை” வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம். ஒரு நம்பிக்கை பாடம் இது. நட்பே துணை இன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் அதில் ஒரு குறிக்கோள், கொள்கை, மண்வாசம், மண்பாசம், காதல், நகைச்சுவை, போன்ற அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கின்ற அறுசுவை விருந்து. பாண்டிச்சேரியில் கதைக்களம் அமைந்தாலும் இங்கு நடப்பது போலவே நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறது. அமரர் அரங்கநாதனின் சிலையில் ஆரம்பிக்கின்ற இந்தப் படம் அந்த சிலையிலேயே முடிவது அழகு. படம் முழுவதும் நம்மை சிலைபோல அமர வைத்திருப்பதும் சிறப்பு. எவ்வித ஆபாசமும் அருவருப்பும் இன்றி காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் டைரக்டர். ஆதியின் இசை அனைவரையும் ஆட வைக்கிறது. ஆதியின் ஹாக்கி விளையாட்டு அனைவரையும் ஓட வைக்கிறது. ஹாக்கி விளையாட்டில் உலக அளவில் கோலோச்சிய இந்தியாவின் பழம்பெருமையை மீண்டும் நினைவுபடுத்த வைக்கிறது. திறமையுடன் விளையாடுவதை விட, சக விளையாட்டு வீரர்களிடம் நட்புடன் விளையாண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை அழகாக சொல்கிற படம் . நட்பே துணை என்ற படத்தின் தலைப்பிலேயே பாதி வெற்றியை பெற்று விட்டார் ஹிப் ஹாப் தமிழன் ஆதி. மீசையை முறுக்கு என்று மென்மையாக சொன்ன அவர், வேங்கையாய் புறப்படு என்று வேகம் காட்டி இருக்கிற படம். வேஷம் கட்டி இருக்கிற படம். இடைவேளையின் போது Half time என்று அறிவித்திருப்பது அழகிய கவிதை. படம் முடிந்த பின் கூட இன்னும் எக்ஸ்ட்ரா டைம் கிடைக்குமா? இன்னும் கொஞ்ச நேரம் படம் பார்ப்போமா? என்று மனம் ஏங்குகிறது. ஒரு உலக கோப்பை ஹாக்கி பைனலைப் பார்ப்பது போல கடைசி 30 நிமிடங்கள்… ஒரு உண்மையான மேட்ச் நேரில் பார்த்தது போல நேர்த்தியாக படமாக்கியுள்ளார்கள் . மிக அழகாக கதைக்களத்தை சொல்லி இருக்கிறார்கள். பாண்டிச்சேரியும் அங்கு எதற்காவது முடிவு தெரிய வேண்டுமானால் ஏதாவது ஒரு போட்டியை வைத்து முடிவு செய்கின்ற வெள்ளையர்கள் பாணி… தற்போது உள்ள கொள்ளையர்களிடம் செய்து முடிக்கின்ற அளவில் கதை துவங்குகிறது… கதையில் விளையாட்டு. காதல். அரசியல் குடும்பம், வீடு, என்று மிக அழகாக கதம்பமாலை போல கனகச்சிதமாய் கோர்க்கப்பட்டுள்ளது . பாடல் காட்சிகளிலும், பாடல் வரிகளிலும் இளைஞர்களின் இதயத்தை இன்பமாக துடிக்க வைத்திருக்கிறார் ஆதி அவர்கள். ஒருவர் ஒரு துறையில் புகழ் பெறும் போது பணிவையும் அடுத்தடுத்த பொறுப்புகளையும் சுமக்க வேண்டும்… அந்த சுமையை சுகமாக சுமந்து இருக்கிறார் நமது ஹிப் ஹாப் தமிழன் ஆதி . படத்தில் மட்டும் எனர்ஜி இல்லை ,படம் பார்த்துவிட்டு வருகின்ற ஒவ்வொருவரும் எனர்ஜியுடன் தான் எழுந்து வருகிறார்கள். நம் பாரம்பரியத்தை காக்க வேண்டும்.. நல்லவர்களிடம் நாடு இருக்க வேண்டும்… அதற்கு இளைஞர்கள் பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது செயலிலும் இறங்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு வெளிவருகிறார்கள்… மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்ற காட்சி அமைப்புகள் நிறைய இருக்கின்றன. ஒரு தெளிந்த நீரோடையாய் பார்த்திபன் தேசிங்கு படம் பண்ணியிருக்கிறார் .அதன் அத்தனை அம்சத்திலும் ஆதியின் பங்கு தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கட்டாயம் பார்க்கவேண்டிய படம், ஒரு நம்பிக்கை பாடம் இது. Dr. வடுகம்.R. சிவகுமார் IPS அவர்களின் பாடல் வரிகள் “ஒளி தரும் சூரியன் உறங்கச் சென்றால் உயிரினம் வாழ்வதில்லை.. வலிகளைத் தாங்கும் பயிற்சியின்றி வாழ்க்கையில் வெற்றி இல்லை”

நட்பே துணை இன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் அதில் ஒரு குறிக்கோள், கொள்கை, மண்வாசம்,

Read more

ஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட தெம்பு படக்குழுவினர்

பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்னும் பாடலை தெம்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேய வெற்றிச்செல்வன் மூவிஸ் தயாரிப்பில் பழனிக்குமரன் இயக்கத்தில்

Read more